×

الإسراء

வசனம் 57

அல்-முக்தஸர்

أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ ٱلْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُۥ وَيَخَافُونَ عَذَابَهُۥٓ ۚ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا ﴿٥٧﴾

இவர்கள் அழைக்கும் வானவர்கள் மற்றும் அவர்களைப் போன்றவர்களும் கூட தம்மை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்யும் நற்செயல்களைத் தேடுகிறார்கள். அவனுக்குக் கட்டுப்படுவதில் யார் நெருக்கமானவர் என ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள். அவனது அருளை எதிர்பார்த்து அவனுடைய தண்டனையைக் குறித்து அஞ்சுகிறார்கள். -தூதரே!- நிச்சயமாக உம் இறைவனின் தண்டனை எச்சரிக்கையாக இருக்கவேண்டியவற்றில் உள்ளதாகும்.