×

الإسراء

வசனம் 49

அல்-முக்தஸர்

وَقَالُوٓا۟ أَءِذَا كُنَّا عِظَـٰمًا وَرُفَـٰتًا أَءِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًا جَدِيدًا ﴿٤٩﴾

மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நிராகரித்தவாறு இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “நாங்கள் இறந்து எலும்புகளாக, எமது உடல்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விட்டாலும் மீண்டும் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா என்ன? நிச்சயமாக இது சாத்தியமற்றது.