அல்-முக்தஸர்
إِنَّ ٱلْمُبَذِّرِينَ كَانُوٓا۟ إِخْوَٰنَ ٱلشَّيَـٰطِينِ ۖ وَكَانَ ٱلشَّيْطَـٰنُ لِرَبِّهِۦ كَفُورًا ﴿٢٧﴾
நிச்சயமாக தமது செல்வங்களை பாவமான காரியங்களிலோ, வீண்விரயமாகவோ செலவு செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவர். வீண்விரயம் செய்யுமாறு அவனிடும் கட்டளையில் அவர்களுக்குக் கட்டுப்படுகிறார்கள். ஷைத்தான் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவனாக இருக்கின்றான். பாவமான காரியத்தைத் தவிர வேறு எதையும் அவன் செய்ய மாட்டான். தன் இறைவன் வெறுக்கும் செயலைத் தவிர வேறு எதையும் அவன் ஏவமாட்டான்.