அல்-முக்தஸர்
مَّن كَانَ يُرِيدُ ٱلْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُۥ فِيهَا مَا نَشَآءُ لِمَن نُّرِيدُ ثُمَّ جَعَلْنَا لَهُۥ جَهَنَّمَ يَصْلَىٰهَا مَذْمُومًا مَّدْحُورًا ﴿١٨﴾
யார் மறுமையின் மீது நம்பிக்கைகொள்ளாமல், அதனைப் பொருட்படுத்தாமல் நற்செயல்களின் மூலம் இவ்வுலகத்தை விரும்புகிறாரோ நாம் நாடிய இன்பங்களையே விரைவாக அவருக்கு வழங்கிடுவோம் அவர் விரும்பியதையல்ல. அதுவும் நாம் நாடியவர்களுக்கே வழங்குவோம். பின்னர் அவருக்காக நரகத்தை தயார்படுத்தியுள்ளோம். அவன் மறுமையை நிராகரித்து இவ்வுலகை தேர்ந்தெடுத்துக் கொண்டதைக் கண்டிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்பட்டு அதில் நுழைந்து, அதன் வெப்பத்தை அனுபவிப்பார்.