×

النحل

வசனம் 90

அல்-முக்தஸர்

إِنَّ ٱللَّهَ يَأْمُرُ بِٱلْعَدْلِ وَٱلْإِحْسَـٰنِ وَإِيتَآئِ ذِى ٱلْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ ٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ وَٱلْبَغْىِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ﴿٩٠﴾

நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு நீதியைக்கொண்டு கட்டளையிடுகிறான். அவர்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் தீர்ப்பு சொல்வதில் சிறப்பிற்கான காரணமின்றி யாருக்கும் முன்னுரிமை வழங்கக் கூடாது என்றும் கட்டளையிடுகிறான். விரும்பிச் செலவளித்தல் அநீதி இழைத்தவரை மன்னித்தல் போன்ற அவர்கள் மீது கடமையாக்கப்படாத உபரியான நன்மைகளையும் அவர்கள் செய்ய வேண்டும் என்றும் தேவையுடைய உறவினர்களுக்கு வழங்கும்படியும் அவன் கட்டளையிடுகிறான். மானக்கேடான கெட்ட வார்த்தைகள், விபச்சாரம் போன்ற தீய செயல்கள், மார்க்கம் தடுத்த அனைத்து பாவமான காரியங்கள், அநீதியிழைத்தல், கர்வம் கொள்ளுதல் ஆகியவற்றை விட்டும் அவன் உங்களைத் தடுக்கிறான். அவன் உங்களுக்கு உபதேசித்ததைக் கொண்டு நீங்கள் படிப்பினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றும்படியும் அவன் தடுத்தவற்றிலிருந்து விலகியிருக்கும்படியும் அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகிறான்.