அல்-முக்தஸர்
وَضَرَبَ ٱللَّهُ مَثَلًا رَّجُلَيْنِ أَحَدُهُمَآ أَبْكَمُ لَا يَقْدِرُ عَلَىٰ شَىْءٍ وَهُوَ كَلٌّ عَلَىٰ مَوْلَىٰهُ أَيْنَمَا يُوَجِّههُّ لَا يَأْتِ بِخَيْرٍ ۖ هَلْ يَسْتَوِى هُوَ وَمَن يَأْمُرُ بِٱلْعَدْلِ ۙ وَهُوَ عَلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ ﴿٧٦﴾
அவர்களுக்கு மறுப்பாக அல்லாஹ் மற்றொரு உதாரணமாக இரு மனிதர்களை கூறுகிறான். அவர்களில் ஒருவர் ஊமையாகவும், செவிடனாகவும், பேசவும், செவியேற்கவும், விளங்கிக் கொள்ளவும் இயலாதவராக இருக்கின்றார். அவர் தனக்கோ மற்றவர்களுக்கோ பயனளிக்க இயலாதவராக, தன் பொறுப்பாளருக்கு கடும் சுமையாக இருக்கின்றார். பொறுப்பாளர் அவரை எங்கே அனுப்பினாலும் அவர் எந்த நன்மையையும் கொண்டுவருவதில்லை. தேவையானதைப் பெற்றுக்கொள்வதுமில்லை. இத்தகைய பண்புகளையுடைய ஒருவரும் நன்றாக செவியேற்கக்கூடிய, பேசக்கூடிய, மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய, அவர்களை நீதியைக் கொண்டு ஏவக்கூடிய, கோணல், சந்தேகமற்ற தெளிவான பாதையில் நிலைத்திருக்கக்கூடிய மனிதரும் சமமாவார்களா என்ன? எனவே, -இணைவைப்பாளர்களே!- பரிபூரண, கண்ணியமிக்க பண்புகளையுடைய அல்லாஹ்வையும் செவியேற்கவோ, பேசவோ, பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்திபெறாத உங்கள் சிலைகளையும் எவ்வாறு சமமாக்குகிறீர்கள்?