அல்-முக்தஸர்
فَلَا تَضْرِبُوا۟ لِلَّهِ ٱلْأَمْثَالَ ۚ إِنَّ ٱللَّهَ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ ﴿٧٤﴾
மனிதர்களே!- பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்திபெறாத இந்த சிலைகளை அல்லாஹ்வுக்கு மாதிரிகளாக ஆக்காதீர்கள். வணங்குவதில் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்குவதற்கு அவனுக்கு எந்த மாதிரியும் இல்லை. தன்னுடைய பரிபூரணமான, கண்ணியமான பண்புகளை அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அவற்றை அறிய மாட்டீர்கள். எனவேதான் அவனுக்கு இணைவைப்பதிலும் உங்கள் சிலைகளுக்கு அவன் ஒப்பானவன் எனச் சித்தரிப்பதிலும் ஈடுபடுகிறீர்கள்.