×

النحل

வசனம் 72

அல்-முக்தஸர்

وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَٰجًا وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَٰجِكُم بَنِينَ وَحَفَدَةً وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَـٰتِ ۚ أَفَبِٱلْبَـٰطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَتِ ٱللَّهِ هُمْ يَكْفُرُونَ ﴿٧٢﴾

மக்களே- அல்லாஹ் உங்கள் இனத்திலிருந்தே துணைகளை உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளான். அவர்களைக் கொண்டு நீங்கள் நிம்மதியடைகிறீர்கள். உங்கள் மனைவியரிலிருந்து குழந்தைகளையும் பேரக்குழந்தைகளையும் வழங்கினான். தூய்மையான உணவுப் பொருள்களில் -மாமிசம், தானியங்கள், பழங்கள் போன்ற- நல்லவற்றை உங்களுக்கு வழங்கியுள்ளான். எண்ணிமுடிக்க முடியாத அல்லாஹ்வின் அதிகமான அருட்கொடைகளை நிராகரித்து, அவனை மாத்திரமே நம்பிக்கை கொண்டு அவனுக்கு நன்றி செலுத்தாது, தவறான சிலைகளையா, விக்கிரகங்களையுமா அவர்கள் நம்பிக்கைகொள்கின்றனர்?