அல்-முக்தஸர்
وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَىٰ بَلَدٍ لَّمْ تَكُونُوا۟ بَـٰلِغِيهِ إِلَّا بِشِقِّ ٱلْأَنفُسِ ۚ إِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَّحِيمٌ ﴿٧﴾
நாம் உங்களுக்காக படைத்த இந்த கால்நடைகள் உங்களின் பயணங்களில் நீங்கள் கடும் சிரமத்துடனேயன்றி அடைய முடியாத இடங்களுக்கும் உங்களின் பாரமான பொருள்களை சுமந்து செல்கிறது. -மனிதர்களே!- நிச்சயமாக உங்களின் இறைவன் பரிவு மிக்கவனாகவும் உங்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எனவேதான் உங்களுக்காக இந்த கால்நடைகளை வசப்படுத்தித் தந்துள்ளான்.