×

النحل

வசனம் 69

அல்-முக்தஸர்

ثُمَّ كُلِى مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ فَٱسْلُكِى سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِنۢ بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَٰنُهُۥ فِيهِ شِفَآءٌ لِّلنَّاسِ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ ﴿٦٩﴾

பின்னர் நீ விரும்பும் விளைச்சல்களிலிருந்து சாற்றை உறிஞ்சிக் கொள். உன் இறைவன் உனக்குக் காட்டிய வசப்படுத்தப்பட்ட பாதைகளில் செல். அந்த தேனீக்களின் வயிறுகளிலிருந்து பல்வேறு நிறங்களுடைய தேன் வெளிப்படைகிறது. அதிலே வெள்ளை, மஞ்சள், மற்றும் ஏனைய நிறங்களும் உண்டு. அதில் மக்களுக்கு நிவாரணம் இருக்கின்றது. அதன் மூலம் நோய்களுக்கு சிகிச்சையளிக்கின்றனர். தேனீக்கு அதனை உதிப்பாக்குவதிலும் அதன் வயிற்றிலிருந்து வெளிப்படும் தேனிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு அல்லாஹ்வின் வல்லமையையும் அவனது படைப்பினங்களின் காரியங்களை நிர்வகிப்பதை அறிவிக்கக்கூடிய அத்தாட்சிகள் இருக்கின்றன. அவர்கள்தாம் படிப்பினை பெறக்கூடியவர்களாவர்.