×

النحل

வசனம் 65

அல்-முக்தஸர்

وَٱللَّهُ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَحْيَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَآ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لِّقَوْمٍ يَسْمَعُونَ ﴿٦٥﴾

அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்கி அதன் மூலம் காய்ந்த, வறண்ட பூமியில் தாவரங்களை வெளிப்படுத்தி அதனை உயிர்ப்பிக்கிறான் செழிப்பாக்குகிறான். அவன் வானத்திலிருந்து மழையை இறக்குவதிலும் அதன் மூலம் வறண்ட பூமியில் தாவரங்களை முளையச் செய்வதிலும் அல்லாஹ்வின் வசனங்களை செவியேற்று சிந்திக்கக் கூடியவர்களுக்கு அவனுடைய வல்லமையை எடுத்துரைக்கும் தெளிவான சான்றுகள் இருக்கின்றன.