அல்-முக்தஸர்
وَقَالَ ٱللَّهُ لَا تَتَّخِذُوٓا۟ إِلَـٰهَيْنِ ٱثْنَيْنِ ۖ إِنَّمَا هُوَ إِلَـٰهٌ وَٰحِدٌ ۖ فَإِيَّـٰىَ فَٱرْهَبُونِ ﴿٥١﴾
அல்லாஹ் தன் அடியார்கள் அனைவருக்கும் கூறுகிறான்: “இரு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் ஒருவனே, இருவர் அல்ல. அவனுக்கு யாதொரு இணையுமில்லை. எனவே என்னையே அஞ்சுங்கள். என்னைத் தவிர மற்றவர்களை அஞ்சாதீர்கள்.