×

النحل

வசனம் 33

அல்-முக்தஸர்

هَلْ يَنظُرُونَ إِلَّآ أَن تَأْتِيَهُمُ ٱلْمَلَـٰٓئِكَةُ أَوْ يَأْتِىَ أَمْرُ رَبِّكَ ۚ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَـٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ ﴿٣٣﴾

பொய்பிக்கும் இந்த இணைவைப்பாளர்கள் திடீரென மரணத்தின் வானவரும் அவருடைய உதவியாளர்களும் இவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவாறு இவர்களின் உயிர்களைக் கைப்பற்ற வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்களா? அல்லது இவ்வுலகில் அவர்களை அடியோடு அழிக்கக் கூடிய வேதனையைத் தாங்கிய அல்லாஹ்வின் கட்டளையையா? மக்காவின் இந்த இணைவைப்பாளர்கள் செய்வதைப் போன்றே முன்னர் வாழ்ந்த இணைவைப்பாளர்களும் செய்தார்கள். அதனால் அல்லாஹ் அவர்களை அழித்து விட்டான். அவன் அவர்களை அழித்து அவர்கள் மீது அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து அழிவிற்கான காரணங்களைத் தேடி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.