அல்-முக்தஸர்
وَقِيلَ لِلَّذِينَ ٱتَّقَوْا۟ مَاذَآ أَنزَلَ رَبُّكُمْ ۚ قَالُوا۟ خَيْرًا ۗ لِّلَّذِينَ أَحْسَنُوا۟ فِى هَـٰذِهِ ٱلدُّنْيَا حَسَنَةٌ ۚ وَلَدَارُ ٱلْـَٔاخِرَةِ خَيْرٌ ۚ وَلَنِعْمَ دَارُ ٱلْمُتَّقِينَ ﴿٣٠﴾
தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களிடம், “உங்களின் இறைவன் உங்களின் தூதர் முஹம்மது மீது எதனை இறக்கினான்?” என்று கேட்கப்பட்டால், “அவன் அவர் மீது மிகப் பெரும் நன்மைமைகளை இறக்கியுள்ளான்” என்று விடையளிப்பர்கள். இவ்வுலகில் அல்லாஹ்வை சிறந்த முறையில் வணங்கி அவனுடைய படைப்புகளுடன் நல்ல முறையில் நடந்து கொண்டவர்களுக்கு வெற்றி, விசாலமான வாழ்வாதாரம் உட்பட நற்கூலி உண்டு. அல்லாஹ் அவர்களுக்காக மறுமையில் ஏற்பாடு செய்துள்ள கூலி இவ்வுலகில் அவர்களுக்கு உடனடியாக வழங்கியதை விட சிறந்ததாகும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு கிடைக்கும் மறுமையின் வீடு மிகவும் சிறப்பானது.