×

النحل

வசனம் 2

அல்-முக்தஸர்

يُنَزِّلُ ٱلْمَلَـٰٓئِكَةَ بِٱلرُّوحِ مِنْ أَمْرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦٓ أَنْ أَنذِرُوٓا۟ أَنَّهُۥ لَآ إِلَـٰهَ إِلَّآ أَنَا۠ فَٱتَّقُونِ ﴿٢﴾

“தூதர்களே!- அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை விட்டும் மக்களை எச்சரிக்கை செய்யுங்கள். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை" என வஹியைக் கொடுத்து வானவர்களை தான் நாடிய தூதர்கள் மீது அல்லாஹ் இறக்குகிறான். எனவே -மனிதர்களே!- என் கட்டளைகளைச் செயல்படுத்தி, நான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி என்னை அஞ்சுங்கள்.”