×

النحل

வசனம் 18

அல்-முக்தஸர்

وَإِن تَعُدُّوا۟ نِعْمَةَ ٱللَّهِ لَا تُحْصُوهَآ ۗ إِنَّ ٱللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ ﴿١٨﴾

மனிதர்களே!- அவன் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளை நீங்கள் எண்ணி முடிக்க முயற்சித்தால் அது உங்களால் முடியாது. அந்தளவுக்கு அவை அதிகமானவையும், பலதரப்பட்டவையுமாகும். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிக்கக் கூடியவன். அதனால்தான் அவைகளுக்கு நன்றி செலுத்தாமல் அலட்சியமாக இருந்த உங்களை அவன் தண்டிக்கவில்லை. உங்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளன். அதனால்தான் நீங்கள் பாவங்களினாலும் நன்றி செலுத்துவதில் குறைசெய்திருந்தும் அருட்கொடைகளை உங்களை விட்டும் அவன் நிறுத்தவில்லை.