அல்-முக்தஸர்
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ ٱلْمَيْتَةَ وَٱلدَّمَ وَلَحْمَ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيْرِ ٱللَّهِ بِهِۦ ۖ فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ﴿١١٥﴾
முறையாக அறுக்கப்படாமல் செத்தவை, வழிந்தோடிய இரத்தம், பன்றியின் அனைத்து உறுப்புகள், அல்லாஹ் அல்லாதவற்றிற்காக பலிகொடுக்கப்பட்டவை ஆகியவற்றை அல்லாஹ் உங்களுக்கு தடைசெய்துள்ளான். இது விருப்பத் தேர்வு உள்ள சமயத்தில் தடுக்கப்பட்டவையாகும். ஆனால் யாரேனும் மேற்கூறப்பட்டவற்றை நிர்ப்பந்தத்தினால் தடைசெய்யப்பட்டதில் விருப்பமின்றியும், தேவையான அளவை மீறாமலும் உண்டுவிட்டால் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பாளன், அவ்வாறு உண்டுவிட்டவர்களை மன்னிக்கக்கூடியவன். அவன் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளன். எனவேதான் நிர்ப்பந்தமான சமயத்தில் அவற்றை அனுமதித்துள்ளான்.