அல்-முக்தஸர்
وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُۥ بَشَرٌ ۗ لِّسَانُ ٱلَّذِى يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِىٌّ وَهَـٰذَا لِسَانٌ عَرَبِىٌّ مُّبِينٌ ﴿١٠٣﴾
“இந்தக் குர்ஆனை ஒரு மனிதன்தான் முஹம்மதுக்குக் கற்றுக் கொடுக்கிறான்” என்று இணைவைப்பாளர்கள் கூறுவதை நாம் அறிவோம். தங்களின் வாதத்தில் அவர்கள் பொய்யர்கள். ஏனெனில் அவர்கள் அவருக்குக் கற்றுக்கொடுப்பதாகக் கூறும் மனிதனின் மொழி அரபி அல்லாத அந்நிய மொழியாகும். இந்தக் குர்ஆனோ தெளிவான அரபிமொழியின் உயர்ந்த இலக்கிய நடையில் இறக்கப்பட்டதாகும். இவ்வாறிருக்கும் போது அரபி அல்லாத ஒரு மனிதனிடமிருந்து அவர் இந்தக் குர்ஆனைப் பெற்றார் என்று எவ்வாறு அவர்கள் கூற முடியும்?