அல்-முக்தஸர்
مَا نُنَزِّلُ ٱلْمَلَـٰٓئِكَةَ إِلَّا بِٱلْحَقِّ وَمَا كَانُوٓا۟ إِذًا مُّنظَرِينَ ﴿٨﴾
மலக்குமார்கள் வரவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை மறுத்துரைத்தவாறு அல்லாஹ் கூறுகிறான்: “உங்களை வேதனையைக் கொண்டு அழிக்கும் சமயத்தில் ஒரு நோக்கத்திற்கேற்பவே தவிர நாம் வானவர்களை இறக்கமாட்டோம். - அவர்கள் நம்பிக்கை கொள்ளாத நிலையில் வானவர்களை நாம் இறக்கினால்- அவர்களுக்கு நாம் அவகாசம் அளிக்க மாட்டோம். மாறாக அவர்கள் உடனே தண்டிக்கப்படுவார்கள்.