அல்-முக்தஸர்
وَقَالُوا۟ يَـٰٓأَيُّهَا ٱلَّذِى نُزِّلَ عَلَيْهِ ٱلذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونٌ ﴿٦﴾
மக்காவைச் சார்ந்த நிராகரிப்பாளர்கள் தூதரிடம் கூறுகிறார்கள்: “அறிவுரை தன் மீது இறக்கப்பட்ட(தாக எண்ணிக்கொண்டிருப்ப)வரே! நிச்சயமாக உமது இந்த அழைப்பின் மூலம் நீர் பைத்தியக்காரர்களில் ஒருவராக இருக்கின்றீர். பைத்தியக்காரர்கள் செயல்படுவதைப் போன்றே நீர் செயல்படுகின்றீர்.