×

إبراهيم

வசனம் 6

அல்-முக்தஸர்

وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ ٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنجَىٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ ۚ وَفِى ذَٰلِكُم بَلَآءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ ﴿٦﴾

தூதரே!- மூஸா தம் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தி, தம் சமூகத்தினரான இஸ்ராயீலின் மக்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டி, அவர்களிடம் கூறியதை நினைவு கூர்வீராக. அவர் கூறினார்: “ சமூகமே! உங்கள் மீது அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள்: பிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து அவன் உங்களைக் காப்பாற்றி, அவர்களின் தீங்குகளிலிருந்து உங்களைப் பாதுகாத்தான். அவர்கள் உங்களை கொடிய வேதனையில் ஆழ்த்தியிருந்தார்கள். பிர்அவ்னின் ஆட்சியைப் பிடித்துக்கொள்ளும் ஒருவன் உங்களிடையே பிறந்துவிடக் கூடாது என்பதற்காக அவன் உங்களின் ஆண் மக்களைக் கொலை செய்து கொண்டும் உங்களை இழிவுபடுத்தவும் அவமானப்படுத்தவும் உங்களின் பெண் மக்களை உயிருடன் விட்டுவைத்துக் கொண்டும் இருந்தான். அவர்களின் இந்த செயல்களில் உங்களின் பொறுமைக்கு மாபெரும் சோதனை இருந்தது. நீங்கள் இந்த சோதனையில் பொறுமையாக இருந்ததால் பிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து அவன் உங்களைக் காப்பாற்றி உங்களுக்கு வெகுமதியளித்தான்.