×

إبراهيم

வசனம் 4

அல்-முக்தஸர்

وَمَآ أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِۦ لِيُبَيِّنَ لَهُمْ ۖ فَيُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ ﴿٤﴾

நாம் அனுப்பிய தூதர்கள் அனைவரையும் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்த தூதை மக்கள் இலகுவாக புரிந்துகொள்ளும் பொருட்டு அவரவர் சமூகம் பேசுகிற மொழியிலேயே அனுப்பினோம். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ள வேண்டும் என்று அவர்களை நிர்ப்பந்திப்பதற்காக நாம் அவர்களை அனுப்பவில்லை. அல்லாஹ் தான் நாடியவர்களை தன் நீதியால் வழிதவறச் செய்கிறான். தான் நாடியவர்களுக்கு தன் அருளால் நேர்வழி காட்டுகிறான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பில், ஏற்பாட்டில் அவன் ஞானம்மிக்கவன்.