அல்-முக்தஸர்
ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى وَهَبَ لِى عَلَى ٱلْكِبَرِ إِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ ۚ إِنَّ رَبِّى لَسَمِيعُ ٱلدُّعَآءِ ﴿٣٩﴾
நன்றியும் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. நற்குழந்தைகளை வழங்குமாறு கேட்ட என் பிரார்த்தனைக்கு அவனே பதிலளித்து, தள்ளாத வயதிலும் எனக்கு ஹாஜரின் மூலம் இஸ்மாயீலையும் சாராவின் மூலம் இஸ்ஹாக்கையும் எனக்கு வழங்கினான். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனை புரிபவர்களின் பிரார்த்தனையைச் செவியேற்கக் கூடியவன்.