×

إبراهيم

வசனம் 31

அல்-முக்தஸர்

قُل لِّعِبَادِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَيُنفِقُوا۟ مِمَّا رَزَقْنَـٰهُمْ سِرًّا وَعَلَانِيَةً مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خِلَـٰلٌ ﴿٣١﴾

தூதரே!- நீர் நம்பிக்கையாளர்களிடம் கூறுவீராக: “நம்பிக்கையாளர்களே! எவ்வித வியாபாரமோ, அல்லாஹ்வின் வேதனையிலிருந்து விமோசனமளிக்கும் ஈடோ, ஒரு நண்பன் தன்னுடைய இன்னொரு நண்பனுக்கு பரிந்துரை செய்யும் உற்ற நட்போ இல்லாத அந்த நாள் வருவதற்கு முன்னரே தொழுகையை சிறந்த முறையில் நிறைவேற்றுங்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து கடமையாக்கப்பட்ட தர்மங்களையும் உபரியான தர்மங்களையும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமையும் பொருட்டு வெளிப்படையாகவோ முஹஸ்துதியிலிருந்து தப்பிக்கும் பொருட்டு இரகசியமாகவோ வழங்குங்கள்.