×

إبراهيم

வசனம் 18

அல்-முக்தஸர்

مَّثَلُ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ ۖ أَعْمَـٰلُهُمْ كَرَمَادٍ ٱشْتَدَّتْ بِهِ ٱلرِّيحُ فِى يَوْمٍ عَاصِفٍ ۖ لَّا يَقْدِرُونَ مِمَّا كَسَبُوا۟ عَلَىٰ شَىْءٍ ۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَـٰلُ ٱلْبَعِيدُ ﴿١٨﴾

தர்மம் செய்தல், உபகாரம் செய்தல், பலவீனர்கள் மீது இரக்கம் காட்டுதல் போன்ற நிராகரிப்பாளர்கள் செய்யும் நற்செயல்கள், புயல் வீசும் நாளில் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட சாம்பலைப் போன்றதாகும். அது அதனை தூக்கி வீசி நாலா புறமும் அடையாளம் தெரியாதவாறு சிதறடித்து விட்டது. இது போன்று நிராகரிப்பாளர்களின் செயல்களை நிராகரிப்பு ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டது. மறுமை நாளில் அவர்களுக்கு அவை பலனளிக்காது. ஈமானின் அடிப்படையில் அமையாத அச்செயல்கள் சத்திய பாதையை விட்டும் தூரமான வழிகேடாகும்.