அல்-முக்தஸர்
وَكَذَٰلِكَ أَنزَلْنَـٰهُ حُكْمًا عَرَبِيًّا ۚ وَلَئِنِ ٱتَّبَعْتَ أَهْوَآءَهُم بَعْدَ مَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِىٍّ وَلَا وَاقٍ ﴿٣٧﴾
தூதரே!- முந்தைய வேதங்களை அந்தந்த மக்களின் மொழிகளிலேயே நாம் இறக்கியது போன்று உம்மீதும் குர்ஆனை, சத்தியத்தை தெளிவுபடுத்தக்கூடியதாக அரபி மொழியில் இறக்கினோம். -தூதரே!- அல்லாஹ் உமக்குக் கற்றுக் கொடுத்த தெளிவான அறிவு உம்மிடம் வந்த பின்னரும் தமது மன இச்சைக்கு ஒத்துவராதவற்றை நீக்குமாறு வேதக்காரர்கள் பேரம் பேசுவதில் அவர்களின் மன இச்சையை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றும் பாதுகாவலர்களோ உம் எதிரிகளுக்கு எதிராக உமக்கு உதவக் கூடியவர்களோ யாரும் இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து உம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.