அல்-முக்தஸர்
سَلَـٰمٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ ۚ فَنِعْمَ عُقْبَى ٱلدَّارِ ﴿٢٤﴾
“உங்கள் மீது சாந்தி நிலவட்டும்” என்று வானவர்கள் அவர்களிடம் வரும் போதெல்லாம் கூறுவார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும் அவனுடைய விதியை ஏற்றுக் கொள்வதிலும் அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதிலும் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததனால் ஆபத்துகளிலிருந்து நீங்கள் தப்பிவிட்டீர்கள் என்பதே அதன் கருத்தாகும். உங்களது இறுதி முடிவான இந்த இறுதி வீடு சிறப்பானதாகி விட்டது.