×
الرعدவசனம் 21

அல்-முக்தஸர்

وَٱلَّذِينَ يَصِلُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوٓءَ ٱلْحِسَابِ ﴿٢١﴾

அவர்கள்தான் அல்லாஹ் சேர்ந்து வாழும்படி கட்டளையிட்ட உறவுகளுடனும் சேர்ந்து வாழ்கிறார்கள். தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகச் செய்யும் அளவுக்கு அவனை அஞ்சுகிறார்கள். தாங்கள் செய்த ஒவ்வொரு பாவத்துக்கும் அல்லாஹ் கணக்கு தீர்த்து விடுவானோ என்று அவர்கள் பயந்து கொண்டிருப்பார்கள். ஏனெனில் எவரிடம் கடுமையாக விசாரணை செய்யப்படுமோ அவர் அழிந்துவிட்டார்.