×

الرعد

வசனம் 11

அல்-முக்தஸர்

لَهُۥ مُعَقِّبَـٰتٌ مِّنۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِۦ يَحْفَظُونَهُۥ مِنْ أَمْرِ ٱللَّهِ ۗ إِنَّ ٱللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا۟ مَا بِأَنفُسِهِمْ ۗ وَإِذَآ أَرَادَ ٱللَّهُ بِقَوْمٍ سُوٓءًا فَلَا مَرَدَّ لَهُۥ ۚ وَمَا لَهُم مِّن دُونِهِۦ مِن وَالٍ ﴿١١﴾

ஒருவருக்குப் பின் ஒருவராக மனிதனிடம் வருகை தரும் வானவர்கள் இருக்கிறார்கள். சிலர் இரவிலும் சிலர் பகலிலும் வருகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு மனிதனை அவனுக்கு நிகழக் கூடாது என எழுதப்பட்டிருக்கும் விதிகளிலிருந்து பாதுகாக்கிறார்கள். மனிதனின் சொற்களையும் செயல்களையும் எழுதுகிறார்கள். ஒரு சமூகம் நன்றி மிக்க தமது நிலையை மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ்வும் அவர்களது நல்ல நிலையை அவர்கள் வெறுக்கும் நிலையாக மாற்ற மாட்டான். அவன் ஒரு சமூகத்தை அழிக்க நாடினால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. -மனிதர்களே!- உங்களைப் பீடித்திருக்கும் தீங்கினை அகற்றுவதற்கு நீங்கள் ஒதுங்க அவனைத் தவிர உங்களுக்கு வேறு பொறுப்பாளன் இல்லை.