×

يوسف

வசனம் 99

அல்-முக்தஸர்

فَلَمَّا دَخَلُوا۟ عَلَىٰ يُوسُفَ ءَاوَىٰٓ إِلَيْهِ أَبَوَيْهِ وَقَالَ ٱدْخُلُوا۟ مِصْرَ إِن شَآءَ ٱللَّهُ ءَامِنِينَ ﴿٩٩﴾

யஃகூபும் அவருடைய குடும்பத்தினரும் தங்களின் நாட்டிலிருந்து எகிப்திலிருக்கும் யூஸுஃபை நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள் அவரிடம் நுழைந்த போது தன் தாய் தந்தையரை தன் பக்கம் அணைத்துக் கொண்டார். தன்னுடைய சகோதரர்களிடமும் குடும்பத்தினரிடமும் அவர் கூறினார்: “அல்லாஹ் நாட்டத்தால் எகிப்தில் பாதுகாப்புப் பெற்றவர்களாக நுழையுங்கள். இங்கு உங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.