அல்-முக்தஸர்
فَلَمَّا دَخَلُوا۟ عَلَيْهِ قَالُوا۟ يَـٰٓأَيُّهَا ٱلْعَزِيزُ مَسَّنَا وَأَهْلَنَا ٱلضُّرُّ وَجِئْنَا بِبِضَـٰعَةٍ مُّزْجَىٰةٍ فَأَوْفِ لَنَا ٱلْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَآ ۖ إِنَّ ٱللَّهَ يَجْزِى ٱلْمُتَصَدِّقِينَ ﴿٨٨﴾
தமது தந்தையின் கட்டளையின் படி அவர்கள் செயற்பட்டு, யூஸுஃபையும் அவரது சகோதரரரையும் தேடிச் சென்றனர். அவர்கள் யூஸுஃபிடம் வந்த போது கூறினார்கள்: “வறுமையும் கஷ்டமும் எங்களைப் பாதித்துள்ளது. நாங்கள் அற்ப பொருளையே கொண்டுவந்துள்ளோம். இதற்கு முன்னர் எங்களுக்கு நிறைவாக தானியங்கள் தந்தவாறு இப்பொழுதும் நிறைவாக தானியங்கள் தாருங்கள். அதிகப்படியாக தர்மமும் செய்யுங்கள். அல்லது எங்களின் அற்ப பொருள்களைக் கண்டுகொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் தர்மம் செய்யக்கூடியவர்களுக்கு அழகிய முறையில் கூலி வழங்குகின்றான்.