அல்-முக்தஸர்
وَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَـٰٓأَسَفَىٰ عَلَىٰ يُوسُفَ وَٱبْيَضَّتْ عَيْنَاهُ مِنَ ٱلْحُزْنِ فَهُوَ كَظِيمٌ ﴿٨٤﴾
அவர் அவர்களைப் புறக்கணித்து தூரமாகிச் சென்று, கூறினார்: “அந்தோ! யூஸுபின் மீது எனது கவலை எவ்வளவு கடுமையானது. அவர் அதிகமாக அழுததனால் அவர் கண்களின் கருவிழி வெண்மையாகி விட்டது. அவர் துக்கத்தாலும் கவலையாலும் நிரம்பியிருந்தார். மக்களை விட்டும் தம் கவலையை மறைத்துக் கொண்டிருந்தார்.