×

يوسف

வசனம் 80

அல்-முக்தஸர்

فَلَمَّا ٱسْتَيْـَٔسُوا۟ مِنْهُ خَلَصُوا۟ نَجِيًّا ۖ قَالَ كَبِيرُهُمْ أَلَمْ تَعْلَمُوٓا۟ أَنَّ أَبَاكُمْ قَدْ أَخَذَ عَلَيْكُم مَّوْثِقًا مِّنَ ٱللَّهِ وَمِن قَبْلُ مَا فَرَّطتُمْ فِى يُوسُفَ ۖ فَلَنْ أَبْرَحَ ٱلْأَرْضَ حَتَّىٰ يَأْذَنَ لِىٓ أَبِىٓ أَوْ يَحْكُمَ ٱللَّهُ لِى ۖ وَهُوَ خَيْرُ ٱلْحَـٰكِمِينَ ﴿٨٠﴾

தமது வேண்டுகோளுக்கு யூஸுஃப் அளித்த பதிலால் அவர்கள் நம்பிக்கையிழந்த போது ஆலோசனை செய்வதற்காக மக்களை விட்டும் தனியே கூடினார்கள். அவர்களில் மூத்த சகோதரர் கூறினார்: “உங்களின் தந்தை உங்களால் தவிரக்க முடியாத ஆபத்து உங்களைச் சூழ்ந்து கொண்டாலே தவிர தம் மகனை திரும்ப அழைத்து வரும்படி உங்களிடம் பெற்ற உறுதியான வாக்குறுதியை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இதற்கு முன்னர் யூஸுஃபின் விஷயத்தில் வாக்குறுதியை நிறைவேற்றாமல் தவறிழைத்துள்ளீர்கள். என் தந்தை எனக்கு திரும்புமாறு அனுமதியளிக்கும் வரை அல்லது என் சகோதரனை விடுவிக்க அல்லாஹ் முடிவு செய்யும் வரை நான் எகிப்தை விட்டுச் செல்லமாட்டேன். அல்லாஹ் மிகச் சிறந்த முறையில் தீர்ப்பளிக்கக்கூடியவன். அவன் உண்மையாகவும் நீதியாகவும் தீர்ப்பளிக்கின்றான்.