அல்-முக்தஸர்
قَالُوٓا۟ إِن يَسْرِقْ فَقَدْ سَرَقَ أَخٌ لَّهُۥ مِن قَبْلُ ۚ فَأَسَرَّهَا يُوسُفُ فِى نَفْسِهِۦ وَلَمْ يُبْدِهَا لَهُمْ ۚ قَالَ أَنتُمْ شَرٌّ مَّكَانًا ۖ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا تَصِفُونَ ﴿٧٧﴾
யூஸுஃபின் சகோதரர்கள் கூறினார்கள்: “இவர் திருடியிருந்தால், எந்த ஆச்சரியமும் இல்லை. இவருக்கு முன்னால் இவருடைய சொந்த சகோதரரும் திருடியிருக்கத்தான் செய்கிறார்.” இவ்வாறு அவர்கள் யூஸுஃபைக் குறிப்பிட்டுப் பேசினார்கள். அவர்களின் இந்த வார்த்தையால் ஏற்பட்ட வலியை யூஸுஃப் மறைத்துக் கொண்டார். அதை அவர்களிடம் வெளிப்படுத்தவில்லை. தம் மனதுக்குள்ளாக இவ்வாறு கூறிக்கொண்டார்: “உங்களிடமுள்ள பொறாமையும் இதற்கு முன் நீங்கள் செய்த தீய செயலுமே இந்த இடத்தில் கெட்டதாகும். உங்களிடம் இருந்து வெளியாகும் இந்த அவதூறை அல்லாஹ் நன்கறிந்தவன்.