×

يوسف

வசனம் 67

அல்-முக்தஸர்

وَقَالَ يَـٰبَنِىَّ لَا تَدْخُلُوا۟ مِنۢ بَابٍ وَٰحِدٍ وَٱدْخُلُوا۟ مِنْ أَبْوَٰبٍ مُّتَفَرِّقَةٍ ۖ وَمَآ أُغْنِى عَنكُم مِّنَ ٱللَّهِ مِن شَىْءٍ ۖ إِنِ ٱلْحُكْمُ إِلَّا لِلَّهِ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ ۖ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُتَوَكِّلُونَ ﴿٦٧﴾

அவர்களுக்கு அறிவுரை வழங்கியவாறு அவர்களின் தந்தை கூறினார்: “எகிப்தில் நீங்கள் அனைவரும் ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள். ஆனால் பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள். இதுதான் யாரேனும் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் நீங்கள் அனைவரும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உகந்ததாகும். அல்லாஹ் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் உங்களை விட்டும் அதனைத் தடுப்பதற்காகவோ அல்லது அவன் உங்களுக்கு நன்மையளிக்க விரும்பவில்லையெனில் நான் உங்களுக்கு நன்மையளிப்பதற்காகவோ இவ்வாறு கூறவில்லை. அல்லாஹ் விதித்ததே நடக்கும். அவனது நாட்டமே நிறைவேறும். நான் என்னுடைய எல்லா விவகாரங்களிலும் அவன் மீதே நம்பிக்கை வைத்துள்ளேன். சார்ந்திருப்பவர்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் அவனையே சார்ந்திருக்க வேண்டும்.