×

يوسف

வசனம் 63

அல்-முக்தஸர்

فَلَمَّا رَجَعُوٓا۟ إِلَىٰٓ أَبِيهِمْ قَالُوا۟ يَـٰٓأَبَانَا مُنِعَ مِنَّا ٱلْكَيْلُ فَأَرْسِلْ مَعَنَآ أَخَانَا نَكْتَلْ وَإِنَّا لَهُۥ لَحَـٰفِظُونَ ﴿٦٣﴾

அவர்கள் தம் தந்தையிடம் வந்து, யூஸுஃப் அவர்களைக் கண்ணியப்படுத்தியது முதற்கொண்டு நடந்த எல்லாவற்றையும் எடுத்துரைத்து விட்டு கூறினார்கள். “எங்களின் தந்தையே! நாங்கள் எங்கள் சகோதரனை அழைத்துச் செல்லவில்லையென்றால் எங்களுக்கு எந்த தானியமும் கிடைக்காது. எனவே அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். நீங்கள் அவரை எங்களுடன் அனுப்பி வைத்தால் நாங்கள் தானியத்தைப் பெறுவோம். அவர் உங்களிடம் பாதுகாப்பாக வந்து சேரும் வரை அவரைப் பாதுகாப்போம் என நாங்கள் உங்களுக்கு வாக்குறுதியளிக்கின்றோம்.