அல்-முக்தஸர்
قَالَ ٱجْعَلْنِى عَلَىٰ خَزَآئِنِ ٱلْأَرْضِ ۖ إِنِّى حَفِيظٌ عَلِيمٌ ﴿٥٥﴾
யூஸுஃப் அரசரிடம் கூறினார்: “எகிப்து நாட்டிலுள்ள பொக்கிஷங்களுக்கும் உணவுகளுக்கும் என்னைப் பொறுப்பாளராக நியமியுங்கள். நிச்சயமாக நான் நம்பிக்கையான பாதுகாப்பாளன். பொறுப்பேற்றுள்ள விஷயத்தைப் பற்றி நன்கறிந்தவனாகவும் இருக்கின்றேன்.