×

يوسف

வசனம் 50

அல்-முக்தஸர்

وَقَالَ ٱلْمَلِكُ ٱئْتُونِى بِهِۦ ۖ فَلَمَّا جَآءَهُ ٱلرَّسُولُ قَالَ ٱرْجِعْ إِلَىٰ رَبِّكَ فَسْـَٔلْهُ مَا بَالُ ٱلنِّسْوَةِ ٱلَّـٰتِى قَطَّعْنَ أَيْدِيَهُنَّ ۚ إِنَّ رَبِّى بِكَيْدِهِنَّ عَلِيمٌ ﴿٥٠﴾

தனது கனவுக்கான யூஸுஃபின் விளக்கம் அரசரை அடைந்த போது அவர் தம் உதவியாளர்களிடம் கூறினார்: “அவரை சிறையிலிருந்து விடுதலை செய்து என்னிடம் அழைத்து வாருங்கள். அரசரின் தூதர் யூஸுஃபிடம் வந்தபோது யூஸுஃப் அவரிடம் கூறினார்: “உம் எஜமானிடம் திரும்பிச் சென்று தங்களின் கைகளை அறுத்துக் கொண்ட அந்தப் பெண்களைக் குறித்துக் கேட்பீராக. விடுதலையடைவதற்கு முன்னர் அவர் குற்றமற்றவர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறினார். நிச்சயமாக என் இறைவன் அவர்கள் எனக்குச் செய்த ஏமாற்று வேலையை நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.”