அல்-முக்தஸர்
قَالَ يَـٰبُنَىَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلَىٰٓ إِخْوَتِكَ فَيَكِيدُوا۟ لَكَ كَيْدًا ۖ إِنَّ ٱلشَّيْطَـٰنَ لِلْإِنسَـٰنِ عَدُوٌّ مُّبِينٌ ﴿٥﴾
யஃகூப் தம் மகன் யூஸுஃபிடம் கூறினார்: “நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் சொல்லி விடாதே. அவர்கள் அதனைப் புரிந்து கொண்டு உன் மீது பொறாமை கொள்வார்கள். பொறாமையினால் உனக்கு எதிராக சூழ்ச்சி செய்வார்கள். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாக இருக்கின்றான்.