×

يوسف

வசனம் 38

அல்-முக்தஸர்

وَٱتَّبَعْتُ مِلَّةَ ءَابَآءِىٓ إِبْرَٰهِيمَ وَإِسْحَـٰقَ وَيَعْقُوبَ ۚ مَا كَانَ لَنَآ أَن نُّشْرِكَ بِٱللَّهِ مِن شَىْءٍ ۚ ذَٰلِكَ مِن فَضْلِ ٱللَّهِ عَلَيْنَا وَعَلَى ٱلنَّاسِ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَشْكُرُونَ ﴿٣٨﴾

நான் என் முன்னோர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றினேன். அது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கும் மார்க்கமாகும். அவன் மாத்திரமே வணங்குவதற்குத் தகுதியானவனாக இருக்கும் போது அவனுக்கு இணையாக யாரையும் ஆக்குவது எங்களுக்கு உகந்ததல்ல. நானும் எனது மூதாதையர்களும் ஏற்றுள்ள தவ்ஹீதும் நம்பிக்கையும் அவன் எங்கள் மீது பொழிந்த அருளாகும். அவன் மனிதர்கள் அனைவரின்பாலும் தூதர்களை ஏகத்துவத்தைக் கொடுத்து அனுப்பி அவர்கள் மீது அருள் புரிந்துள்ளான். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் அவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதில்லை. மாறாக நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.