×

يوسف

வசனம் 36

அல்-முக்தஸர்

وَدَخَلَ مَعَهُ ٱلسِّجْنَ فَتَيَانِ ۖ قَالَ أَحَدُهُمَآ إِنِّىٓ أَرَىٰنِىٓ أَعْصِرُ خَمْرًا ۖ وَقَالَ ٱلْـَٔاخَرُ إِنِّىٓ أَرَىٰنِىٓ أَحْمِلُ فَوْقَ رَأْسِى خُبْزًا تَأْكُلُ ٱلطَّيْرُ مِنْهُ ۖ نَبِّئْنَا بِتَأْوِيلِهِۦٓ ۖ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلْمُحْسِنِينَ ﴿٣٦﴾

அவர்கள் அவரை சிறையில் அடைத்தார்கள். அவருடன் இரு இளைஞர்களும் சிறைபுகுந்தார்கள். அவர்களில் ஒருவர் யூஸுஃபிடம் கூறினார்: “நான் கனவிலே மதுபானம் தயாரிப்பதற்கான திராட்சை ரசம் பிழிவதாகக் கண்டேன்.” மற்றொருவர் கூறினார்: “நான் என் தலையிலே ரொட்டியை சுமந்து செல்வதாக, அதனைப் பறவைகள் கொத்தித் தின்பதாகக் கண்டேன்.” -யூஸுஃபே!- நாங்கள் கண்டதன் விளக்கத்தை எங்களுக்கு அறிவிப்பீராக. நாங்கள் உம்மை உபகாரம் செய்வோரில் ஒருவராகக் காண்கிறோம்.