×

يوسف

வசனம் 30

அல்-முக்தஸர்

وَقَالَ نِسْوَةٌ فِى ٱلْمَدِينَةِ ٱمْرَأَتُ ٱلْعَزِيزِ تُرَٰوِدُ فَتَىٰهَا عَن نَّفْسِهِۦ ۖ قَدْ شَغَفَهَا حُبًّا ۖ إِنَّا لَنَرَىٰهَا فِى ضَلَـٰلٍ مُّبِينٍ ﴿٣٠﴾

அந்தச் செய்தி நகரெங்கும் பரவியது. இதைக் கண்டிக்கும்விதமாக பெண்களில் சிலர் கூறினார்கள்: “அரசனின் மனைவி தன் அடிமையை தன்பக்கம் கவர்ந்திழுக்க முயற்சி செய்தாள். அவள் தன்அடிமையின் மீது காதலில் விழுந்து விட்டாள். -தனது அடிமையில்- அவள் மதிமயங்கி அவர் மீது கொண்ட அன்பினால் அவள் தெளிவான தவறில் உள்ளதாகவே நாம் கருதுகிறோம்.