×

يوسف

வசனம் 25

அல்-முக்தஸர்

وَٱسْتَبَقَا ٱلْبَابَ وَقَدَّتْ قَمِيصَهُۥ مِن دُبُرٍ وَأَلْفَيَا سَيِّدَهَا لَدَا ٱلْبَابِ ۚ قَالَتْ مَا جَزَآءُ مَنْ أَرَادَ بِأَهْلِكَ سُوٓءًا إِلَّآ أَن يُسْجَنَ أَوْ عَذَابٌ أَلِيمٌ ﴿٢٥﴾

இருவரும் கதவின்பால் விரைந்தனர். யூஸுஃப் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடினார். அவள் அவரை வெளியேற விடாமல் தடுப்பதற்காக ஓடினாள். வெளியேறுவதைத் தடுக்க அவரது சட்டையைப் பிடித்து அவருடைய ஆடையின் பின் பகுதியை அவள் கிழித்து விட்டாள். கதவுக்கு அருகில் அவளுடைய கணவனை இருவரும் கண்டார்கள். அரசனின் மனைவி தந்திரமாக அரசனிடம் கூறினாள்: “மன்னரே! உங்களின் மனைவியுடன் மானக்கேடான காரியம் செய்ய நாடியவருக்கான தண்டனை, சிறையிலடைத்தல் அல்லது நோவினை தரும் வேதனையைத் தவிர வேறெதுவும் இல்லை.”