அல்-முக்தஸர்
لَقَدْ كَانَ فِى قَصَصِهِمْ عِبْرَةٌ لِّأُو۟لِى ٱلْأَلْبَـٰبِ ۗ مَا كَانَ حَدِيثًا يُفْتَرَىٰ وَلَـٰكِن تَصْدِيقَ ٱلَّذِى بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ كُلِّ شَىْءٍ وَهُدًى وَرَحْمَةً لِّقَوْمٍ يُؤْمِنُونَ ﴿١١١﴾
தூதர்கள் மற்றும் முந்தைய சமூகங்களின் சம்பவங்களிலும் யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களின் சம்பவங்களிலும் நல்ல அறிவுடைய மக்களுக்கு உபதேசம் இருக்கின்றது. அதனை உள்ளடக்கிய குர்ஆன் அல்லாஹ்வின் மீது பொய்யாக புனைந்து கூறப்பட்ட வாக்கல்ல. ஆனால் அது தனக்கு முன்னர் அல்லாஹ்விடமிருந்து இறங்கிய வேதங்களை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் அவசியமான ஒவ்வொரு சட்டத்தையும் வழிமுறையையும் விவரிக்கக் கூடியதாகவும் நன்மையான விஷயங்களின் பக்கம் வழிகாட்டக் கூடியதாகவும் நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு அருளாகவும் இருக்கின்றது. அவர்கள்தாம் இதிலிருந்து பயனடைவார்கள்.