×

يوسف

வசனம் 109

அல்-முக்தஸர்

وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلَّا رِجَالًا نُّوحِىٓ إِلَيْهِم مِّنْ أَهْلِ ٱلْقُرَىٰٓ ۗ أَفَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۗ وَلَدَارُ ٱلْـَٔاخِرَةِ خَيْرٌ لِّلَّذِينَ ٱتَّقَوْا۟ ۗ أَفَلَا تَعْقِلُونَ ﴿١٠٩﴾

தூதரே!- உமக்கு முன் நாம் மனிதர்களையே தூதர்களாக அனுப்பியுள்ளோம். வானவர்களை அல்ல. உமக்கு வஹி அறிவித்தவாறே அவர்களுக்கு வஹி அறிவித்தோம். அவர்கள் நகரவாசிகளாக இருந்தார்கள். நாட்டுப்புறத்தவர்களாக அல்ல. அவர்களின் சமூகங்கள் அவர்களை நிராகரித்ததனால் நாம் அந்த சமூகங்களை அழித்து விட்டோம். உம்மை நிராகரிப்பவர்கள் பூமியில் பயணம் செய்து தங்களுக்கு முன்னர் நிராகரித்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் படிப்பினை பெறவில்லையா? இவ்வுலகில் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையின் இன்பங்களே சிறந்ததாகும். இதுதான் சிறந்தது என்பதை புரிந்து கொள்ளவில்லையா? எனவே அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி -அவற்றில் மிகப் பெரியது ஈமான் கொள்வது- அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவற்றில் மிகப் பெரியது அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குவது, இறைவனை அஞ்சுங்கள்.