அல்-முக்தஸர்
وَلَئِنْ أَذَقْنَا ٱلْإِنسَـٰنَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنَـٰهَا مِنْهُ إِنَّهُۥ لَيَـُٔوسٌ كَفُورٌ ﴿٩﴾
நாம் மனிதனுக்கு ஆரோக்கியம், செல்வம் போன்ற ஏதேனும் அருட்கொடையை வழங்கி பின்னர் அந்த அருட்கொடையைப் பறித்துக் கொண்டால் அல்லாஹ்வின் அருளை விட்டும் அவன் மிகவும் நம்பிக்கையிழந்தவனாகவும், அவனுடைய அருட்கொடைகளுக்கு மிகவும் நன்றி கெட்டவனாகவும் ஆகிவிடுகிறான். அந்த அருட்கொடையை அல்லாஹ் அவனிடமிருந்து பறித்துக்கொண்டால் அதனை மறந்து விடுகிறான்.