×

هود

வசனம் 7

அல்-முக்தஸர்

وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْشُهُۥ عَلَى ٱلْمَآءِ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۗ وَلَئِن قُلْتَ إِنَّكُم مَّبْعُوثُونَ مِنۢ بَعْدِ ٱلْمَوْتِ لَيَقُولَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌ ﴿٧﴾

அவன்தான் பிரமாண்டமான வானங்களையும் பூமியையும் அவையிரண்டிலும் உள்ளதையும் ஆறு நாட்களில் படைத்தான். அவையிரண்டையும் படைப்பதற்கு முன்னால் அவனுடைய அர்ஷ் நீரின் மீதிருந்தது. -மனிதர்களே!- உங்களில் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் நற்செயல்கள் புரிபவர்கள் யார்? அவனுக்குக் கோபமுண்டாக்கும் தீய செயல்கள் புரிபவர்கள் யார்? என்பதை சோதிப்பதற்காகத்தான் அவற்றைப் படைத்தான். ஒவ்வொருவருக்கும் அவன் தகுந்த கூலியை வழங்கிடுவான். -தூதரே!- “மக்களே, நீங்கள் மரணித்த பிறகு விசாரணை செய்யப்படுவதற்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால் அல்லாஹ்வை நிராகரித்து மீண்டும் எழுப்பப்படுவதை மறுத்தவர்கள் கூறுவார்கள், “நீர் ஓதிக் காட்டும் குர்ஆன் தெளிவான சூனியமும் அசத்தியமுமாகும்.”