அல்-முக்தஸர்
قَالَ يَـٰقَوْمِ أَرَءَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّى وَءَاتَىٰنِى مِنْهُ رَحْمَةً فَمَن يَنصُرُنِى مِنَ ٱللَّهِ إِنْ عَصَيْتُهُۥ ۖ فَمَا تَزِيدُونَنِى غَيْرَ تَخْسِيرٍ ﴿٦٣﴾
ஸாலிஹ் தம் சமூகத்தாரிடம் மறுத்தவராக கூறினார்: “என் சமூகமே! நான் என் இறைவனிடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் மீதிருந்து, அவன் எனக்கு தூதுத்துவம் என்னும் அருளையும் வழங்கியிருக்க, அவன் எனக்கு எடுத்துரைக்குமாறு கட்டளையிட்டதை விட்டுவிட்டு அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னை யார்தான் காப்பாற்ற முடியும்? நீங்கள் எனக்கு வழிகேட்டையும் அவனது திருப்பொருத்தத்தை விட்டும் விலகிச் செல்வதையே அதிகரிக்கிறீர்கள்.