அல்-முக்தஸர்
مِن دُونِهِۦ ۖ فَكِيدُونِى جَمِيعًا ثُمَّ لَا تُنظِرُونِ ﴿٥٥﴾
எங்களின் தெய்வங்களை வணங்குவதை விட்டும் நீர் எங்களைத் தடுத்துக் கொண்டிருந்ததனால் அவற்றுள் சில உம்மைத் தீண்டி பைத்தியமாக்கி விட்டது என்றே நாங்கள் கூறுவோம். ஹூத் கூறினார்: “நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன். நீங்களும் சாட்சி கூறுங்கள், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் தெய்வங்களை வணங்குவதை விட்டும் நான் முற்றிலும் நீங்கி விட்டேன் என்பதற்கு. நீங்களும் என்னைப் பைத்தியமாக்கி விட்டது என்று நீங்கள் கூறிக் கொண்டிருக்கும் உங்கள் தெய்வங்களும் சேர்ந்து எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். எனக்கு எந்த அவகாசமும் அளிக்க வேண்டாம்.