அல்-முக்தஸர்
وَيَـٰقَوْمِ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ يُرْسِلِ ٱلسَّمَآءَ عَلَيْكُم مِّدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَىٰ قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا۟ مُجْرِمِينَ ﴿٥٢﴾
என் சமூகமே! அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். பின்னர் உங்கள் பாவங்களை விட்டு விட்டு அவன் பக்கமே திரும்புங்கள். -பாவங்களில் மிகப் பெரியது இணைவைப்பாகும்.- அதற்கு வெகுமதியாக அல்லாஹ் உங்கள் மீது பெரு மழையைப் பொழியச் செய்வான். அதிகமான பிள்ளைகளையும் செல்வங்களையும் வழங்கி உங்களுடைய மதிப்பை மென்மேலும் அதிகரிப்பான். எனது அழைப்பை புறக்கணித்துவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் எனது அழைப்பைப் புறக்கணித்ததனாலும் அல்லாஹ்வை நீங்கள் நிராகரித்ததனாலும் நான் கொண்டு வந்ததை பொய்ப்பித்ததனாலும் குற்றவாளிகளாகி விடுவீர்கள்.